தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் நேற்று நடந்த 2 வது மாநில மாநாட்டில் “தாய் மாமா” என சொன்ன பேச்சு பெரும் விவாதத்துக்கு இடம் தந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து,பேசினார் அதில் ; “தாய் மாமா என்பது 50 வருடங்களாக அனைவருக்கும் ஒரு உறவுப் பெயர். இத்தனை வருடங்களாக எங்கிருந்தார் அந்த தாய் மாமா? எத்தனை வீடுகளுக்கு விசேஷம் நடந்தபோது அவர் வந்தார்? இப்போ தாய் மாமா என்று அழைக்கிற அந்த நபர், நடித்து வெளியான திரைப்படங்களுக்கே இலவச டிக்கெட் கொடுக்க மாட்டாரே. எல்லாம் பணம் வாங்கித்தான் வழங்குறாரே!” என விமர்சனம் செய்தார்.
அத்துடன், “விஜய் அவர்களின் அரசியல் வருகையை நாங்கள் வரவேற்கிறோம். புதியவர்கள் வருவது நல்லதுதான். ஆனா பேச்சில் ஒரு டெப்த் இருக்கணும். சும்மா எதற்கும் பாஜக-வை பாசிசம் என்று சொல்வது சிரிதான். பாஜகவில் நான் இருக்கிறேன். எனக்கும் மரியாதை வேண்டும். இல்லையென்றால் நானும் பேசாமல் போயிருப்பேன். ஆனால் நாங்க கட்சிக்காக, கொள்கைக்காக, உணர்வுக்காக இருப்போம். ஒவ்வொரு தொண்டனும் பல விஷயங்களை இழந்துட்டு இருக்காங்க. என்ன சம்பாதிக்கிறோம், என்ன கொள்கை? அதனால் தான், எங்கள் கட்சியை குறை சொல்லும் வார்த்தை யோசிச்சுதான் பயன்படுத்தணும்,” என்றார்.
மீனவர் பிரச்சனையைக் குறிப்பிட்ட அவர், “ஒவ்வொரு பிரச்சனையையும் ஆழமாகப் பார்க்கணும். அரசியல் ஆரோக்கியமாக இருக்கணும். விஜய் அவர்களே முன்பு சொன்னார், நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். ஆனா இப்போ ஒரு வருடம் கழிச்சு, அவருடைய பேச்சு நேற்று எப்படி இருந்துச்சு பாருங்க! அது ஒரு எதிர்மறை மாற்றத்தை காட்டுகிறது. அரசியலில் வந்த பிறகு, வார்த்தைகளைப் பொறுப்புடன் பேசணும்,” என தன் பார்வையை தெளிவாகப் பதிவு செய்தார்.
