தயார் நிலையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி, அரசியல் சூடு அதிகரித்து வரும் நிலையில், தமிழக  வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் நடைபெற்ற தவெக மாநாட்டில் “முதல்வர் ஸ்டாலின் “uncle”  எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“நீங்க மேடையில் பேசும்போது, ஒரு பதவி வகிக்கும் முதலமைச்சரை ‘மாமா’ன்னு கூப்பிடறீங்க. இது சினிமா மேடையா? ரெண்டு விசில் அடிச்சா போதுமா அரசியல் முடிஞ்சுறதுக்கு? இப்படி எதையாவது சொல்லினா, ரொம்ப நாள் இல்ல விஜய் அவர்களை யாராவது பூமர்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? 51 வயசு இருக்கும் ஒரு மனிதரை பூமர்னு சொன்னா சந்தோஷமா இருக்கும்? அரசியல் ஒரு பொறுப்புள்ள மேடை, அதுல பேசும் வார்த்தைகளுக்கு ஓர் அடையாளம் இருக்கு,” என்றார் அண்ணாமலை.

மேலும்,  இன்னைக்கு தாமரை மேல தண்ணி கூட ஒட்டாது எப்படி தமிழக மக்கள் ஒட்டுவாங்கன்னு சொல்றாரு “தமிழகம் முழுக்க, என் மாமா, உங்க சித்தப்பா, நம்ம உறவுகள், தமிழர் எல்லாம் சேர்ந்து 18% வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போட்டிருக்காங்க. இவங்க யாரும் வெளியூர்ல இருந்து வந்தவங்க கிடையாது.

தமிழ்நாட்டில் நம்ம மக்கள் தான் இந்த கூட்டணிக்கு ஆதரவு தந்திருக்காங்க. தாம் பாசிசம் போல பேசுவதை ஏற்க முடியாது. அரசியலுக்குள்ள கெளரவம் இருக்கணும், அரசியல் கலாசாரம் இருக்கணும். அதனால தான் நா பதில் சொல்லுறேன். ஆனால், பாசிசம், மாமா, பூமர்னு பேசற வார்த்தைகள், எல்லாம் யோசிச்சு பேச வேண்டிய விஷயங்கள்,” எனவும்  அவர் பேசினார்.