விலங்குகளின் உலகம் ஆச்சரியங்களைத் தாங்கி நிறைந்தது. குறிப்பாக, வேட்டையாடும் விலங்குகளின் திறமைகள் பல சமயங்களில் மனிதர்களையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காணொளி, இதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. இதில், ஒரு கழுகு தன்னை விட பல மடங்கு பெரிய நரியை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அதில், கழுகின் கூர்ந்த பார்வை, ஆட்டம் வட்டமில்லாத நேரடி தாக்குதல் ஆகியவை சிறப்பாக இடம்பிடித்துள்ளன.
வீடியோவில், கழுகு மூன்று முறை நரியை தாக்கும் முயற்சி செய்கிறது. தனது கூரிய நகங்களால் பிடிக்க முயல்கிறது. ஆனால், நரி தனது வேகத்தையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டு ஒவ்வொரு முறையும் அதிரடியாக தப்பித்து விடுகிறது. இந்த பரபரப்பான சண்டை, இயற்கையின் தனித்துவத்தை நினைவூட்டுகிறது. வலிமைதான் வெற்றிக்கு முக்கியம் என்பதில்லை, புத்திசாலித்தனமும் அதற்குத் துணையாக இருக்கிறது என்பதையும் இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.
இந்த வீடியோவுக்கு ஏற்கனவே லட்சக்கணக்கான பார்வைகள் கிடைத்துள்ளன. வலைதள பயனர்கள் பலரும், “இது டிஸ்கவரி சேனல்ல கூட வராத அரிய காட்சி”, “வன்முறையில்லாத காட்சியிலும் அதிரடி இருக்க முடியும்” எனக் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர். கழுகின் தைரியம் மற்றும் நரியின் தப்பிக்கும் திறன், இரண்டையும் பாராட்டும் விதமாக, இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை முழுவதுமாக கவர்ந்துள்ளது.
This fox dodges a falcons capture 3 separate times pic.twitter.com/IDmkJjzqYx
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 19, 2025
