திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 28 வயது பெண் ஒருவர், பல்லடம் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரபு(27) மற்றும் பானு(32) ஆகியோரும் வந்தனர். அப்போது அவர்கள் 3 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் அவ்வபோது 28 வயது பெண் பிரபுவுக்கு கடன் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த பணத்தை அந்த பெண் பிரபுவிடம் கேட்டுள்ளார்.
அதற்காக அவர் பணம் கொடுக்க வேண்டும் என்றால் தன்னுடன் நேரம் செலவிடுமாறும், ஆபாசமாக வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் பிரபுவிடம் வீடியோ காலில் பேசியிருக்கிறார். அப்போது அதனை புகைப்படமாக எடுத்த பிரபு, பானுவிற்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பானுவும், பிரபுவும் சேர்ந்து அந்த புகைப்படத்தை 28 வயது பெண்ணிடம் காட்டி கடனை திருப்பி கேட்டால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரபு மற்றும் பானுவை கைது செய்தனர்.
