சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே இன்று (ஆக.22) அதிகாலை நேரத்தில் சோகத்தையும், வலியையும் ஏற்படுத்தும் கோர விபத்து ஒன்று ஏற்பட்டது.

பவானியில் உள்ள கோயிலுக்கு சென்று  வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கமலம், சுகுமார், சுசீலா மற்றும் அதே பகுதியை சேர்ந்த மோகன், புவனேஸ்வரி உள்ளிட்டோர் வேனில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில், வெப்படை அருகே அவர்கள் பயணித்த வேன், வேகமாக வந்த லாரி மீது மோதியதில் கமலம், சுகுமார் மற்றும் மோகன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.