கரூர் மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) கடுமையான அதிர்ச்சியாக, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களாகவே சில தவெக தொண்டர்களிடம் திமுக அணுகல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வந்திருந்த நிலையில், தற்போது, தவெக ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதுவரை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை குறிவைத்து உறுப்பினர்களை திமுகவில் சேர்த்துவந்த செந்தில் பாலாஜி, தற்போது தவெகவினரையும் நோக்கி செயல்பட ஆரம்பித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாநில முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் வடக்கு ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியை சேர்ந்த திரு. லோகநாதன் (TVK ஒன்றிய துணைச் செயலாளர்), திரு. சீனிவாசன் (TVK ஒன்றியச் செயலாளர்), திரு. சின்னதுரை, திரு. ஹரிஷ் குமார்,… pic.twitter.com/Zd4MKootpO
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 21, 2025
“>
ஒருபுறம் விஜய் தலைமையிலான தவெக, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தத்தில் இருக்க, மற்றொரு புறம் கட்சி நிர்வாகிகளை இழக்கத் தொடங்கியிருப்பது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
