மதுரையில் இன்று நடைபெறும் தமிழகம் வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, தமிழ் அரசியலில் மிகப்பெரிய கட்டத்தை கடந்ததாகவே பார்க்கப்படுகிறது. காலை முதலே தமிழகத்தின் மூலைமூலையிலிருந்து வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் திடலை நிரப்ப, அந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் மேடையிலும் காண முடிந்தது. கட்சியின் வளர்ச்சி, நிர்வாக அமைப்புகள், 2026 சட்டசபை தேர்தல் என பல முக்கிய செயல்பாடுகளுக்கான முடிவுகள் எதிர்பார்க்கப்பட்ட வேளையில், திடீரென சில தொண்டர்கள் கூட்டமாக வெளியேறிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு நடந்து கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் இருந்து சில தொண்டர்கள் கொத்து கொத்தாக உடனடியாக வெளியேறும் காட்சிகள் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. . இச்சம்பவம் நடந்த வேளையில் மேடையில் இருந்த நடிகர் விஜயின் முகத்தில் சற்று கவலை தெரிந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், மேடையின் அமைதியும், நிகழ்ச்சியின் தொடர்ச்சியும் பாதிக்கப்படாமல் நடந்ததோடு, விஜய் தனது உரையை தொடரப்போவர் உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவெக மாநாடு – வெளியேறிய தொண்டர்கள்#Vijay #TVKVijay #Madurai #TVKMaduraiMaanadu#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/atmXIqrv2f
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 21, 2025
“>
