தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் உற்சாகத்துடன் நடைபெறுகிறது. இந்த மாநாடு, நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. ஆனால், இதற்கிடையே எக்ஸ் வலைதளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர் வெளியிட்ட பதிவு, கட்சியின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பதிவில், திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவதற்காக ஒரு பதிவுக்கு 200 ரூபாய் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வெளிப்பாடு, அரசியல் களத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மக்கள் கருத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்க்ரீன்ஷாட் வெளியானது, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
TVK Family Alert…!!!
DMK party supporters are allegedly being paid to spread fake and negative news about TVK through Twitter pages. Stay alert, everyone..#TVKMaduraiManaadu #TVKVettriMaanadu #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/8UrzJMbOpg
— RAO :-)🦅 (@RAO_BACK_) August 21, 2025
