இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்தக் காணொளியில், ஒரு குறுகலான சாலையில் பல எருதுகளை ஓடவிட்டு, ஏராளமான மக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில், சில சிறுவர்கள் எருதுகளை கோபப்படுத்திவிட்டு ஓடி வருகின்றனர். அவர்களில் ஒரு சிறுவன், திரும்பிப் பார்த்து எருதுகளை மேலும் தூண்டிவிடும் வகையில் செயல்பட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் இருந்து வந்த ஒரு எருது அந்த சிறுவனை முட்டி, காற்றில் தூக்கி வீசியது.
இந்த திடுக்கிடும் காட்சி காணொளியாகப் பதிவாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம், விலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை மிக முக்கியம் என்பதை இந்தக் காணொளி எடுத்துக்காட்டுகிறது.
View this post on Instagram
