தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் நாளை (ஆகஸ்ட் 20) சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒண்டிவீரன் நினைவிடத்தில் ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிசுதாரர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள 21 டாஸ்மாக் கடைகள் மற்றும் இணைந்த பார்கள் நாளை மட்டும் மூடப்பட வேண்டும் என தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
