தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகிலன். கடந்த 2023-ஆம் ஆண்டு முகிலன் 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் முகிலனை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த தேனி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட முகிலனுக்கு 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் சிறுவனுக்கு தமிழக அரசு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
