சென்னை மாவட்டம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதியினருக்கு 24 மற்றும் 19 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் எம்.பி.ஏ படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி ஆனந்தன் கொளத்தூரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு அங்கேயே மாலை நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது ஆனந்தனின் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் திருமணத்தில் அவரது மகளுக்கு விருப்பம் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இளம்பெண் தற்கொலை செய்ய முயன்றார்.

அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.