திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் ராபிடோ நிறுவனத்தில் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை பால்ராஜ் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஜிஎஸ்டி சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தாம்பரம் சானடோரியம் பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே சென்றபோது பின்னால் வந்த கார் பைக் டாக்ஸி மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நிற்காமல் சென்ற கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
