சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வருவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 74200 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9275 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 1520 வரையில் குறைந்துள்ளது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 10123 ரூபாய்க்கும் ஒரு சவரன் 80984 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் 126.20 ரூபாய்க்கும் ஒரு கிலோ விலை 126200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.