திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள ஐ.பெரியசாமி இல்லத்தில் வைத்து அவர் மற்றும் அவரது மனைவியிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கிடைத்த பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்மூடியை  அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது ஐ பி மீதும் கைது நடவடிக்கை பாயும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.பெரிய சாமியின் மகள் மற்றும் மகன் செந்தில்குமார் எம்எல்ஏ வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.