நாடு முழுவதும் இன்று 79 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் பன்னிரண்டாவது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இவர் தொடர்ந்து பன்னிரண்டாவது முறை தேசிய கொடியை ஏற்றி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. பின்னர் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார். இதை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். முன்னதாக பிரதமர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
