ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளர் சையத் வாஹித். இவரது மனைவி சனா பேகம். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சையத் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக அபுதாபியில் வாசித்து வந்தார். சமீபத்தில் சையத் அபுதாபியில் வசிக்கும் மனைவியின் தம்பி வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சையத், சனா ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்த 4 மாத ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை, 7 வயது சிறுமி ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சனாவின் தந்தை இஸ்மாயில் பெற்றோரை இழந்த தவிக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள அபுதாபிக்கு சென்றுள்ளார். பெற்றோர் இறந்தது தெரியாமல் மருத்துவமனையில் 3 பிள்ளைகளும் சிகிச்சை பெற்று வருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
