சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 74320 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சவரனுக்கு 1240 வரையில் குறைந்துள்ளது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 10134 ரூபாய்க்கும் ஒரு சவரன் 81072 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிாம் 126 ரூபாய்க்கும் ஒரு கிலோ விலை 126000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
