அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்று நேரத்தில் திமுகவில் இணைவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவர் அதன் பிறகு பின்னர் பாஜகவில் இணைந்தார்.

அதன் பிறகு கடந்த வருடம் மீண்டும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து தற்போது விலகி திமுகவில் அவர் இணைய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.