சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, இதில், ஒரு ஜோடி ரீல்ஸ் எடுப்பதற்காக சினிமா பாணியில் கால்வாயில் குதிப்பதைக் காணலாம்.

இணையத்தில் வைரலாகும் ஆசையில் சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயங்குவதில்லை.  வைரலாகும் வீடியோவில், ஒரு ஜோடி கால்வாயின் கரையில் நிற்பதை காணலாம். சுற்றிலும் பலர் இருக்கிறார்கள்.

அப்போது தம்பதியினர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து சினிமா பாணியில் கால்வாயில் குதிக்கின்றனர், அவர்கள் இருவரும் தண்ணீரில் விழுந்தவுடன், வீடியோ முடிகிறது.

இந்த வீடியோவை @imnatasha09 என்ற  x பயனர் பகிர்ந்துள்ளார். ‘வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட வேண்டாம், தண்ணீரைப் பற்றி பயம் வேண்டாம்… ரீல்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் ஐயா’ என்று ஆச்சரியத்துடன் தலைப்பில் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.