தலைநகரான டெல்லியில் இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் செய்த அருவருக்கத்தக்க செயல் குறித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதையில் தனது மகனிடம் சிறுநீர் கழிக்க கூறியுள்ளார்.

அதன்படி அந்த சிறுவனும் ரயில் தண்டவாளத்தில் சிறுநீர் கழிக்கிறார். இதனை அப்பகுதியில் நின்ற நபர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்து கொண்டிருக்க ரயில்வே நிலைய ஊழியர் ஒருவர் இதுபோன்று பொது இடங்களில் செய்யக்கூடாது என அறிவுறுத்துகிறார். பின்னர் அந்த நபர் தனது மகனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகன்று செல்கிறார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் உள்ள கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன.

அப்படி இருக்கும் பொழுது ஏன் இது போன்று நடந்து கொள்கிறீர்கள்? என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் 96இந்தியாவில் இதுபோன்ற நாகரிகம் மற்றும் மக்கள் உள்ளனர் என விமர்சித்துள்ளனர்.