கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அருகே முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று ஒரு கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் கை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கையை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு பாலத்தின் பையில் இன்னொரு கையும் கடந்தது.
இதையடுத்து இன்னொரு 1 கிலோ மீட்டர் தொலைவில் சில பாலிதீன் பைகளில் துண்டிக்கப்பட்ட 2 கால்களும், இதயம், வயிறு, குடல் ஆகிய உடல் பாகங்களும் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அனைத்து உடல் பாகங்களையும் கைப்பற்றினர். ஆனால் தலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் தலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதோடு சேகரித்த உடல் பாகங்களை ஒன்றிணைத்த போது அது பெண்ணின் உடல் பாகம் என்பது தெரிய வந்தது. வேறு ஏதோ பகுதியில் பெண்ணை கொன்று அவரது உடல் துண்டு துண்டாக வெ ட்டி பாலித்தீன் பைகளில் மர்ம நபர்கள் வீசி சென்று இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதினர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது துமகூரு குருவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா என்பவர் கடந்த மூன்றாம் தேதி காணாமல் போனதும் அவரை தான் துண்டு துண்டாக வெட்டி கொன்றதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனை ஏற்க லட்சுமி தேவம்மாவின் கணவர் பசுவராஜ் மறுத்துவிட்டார். ஆனாலும் லட்சுமி தேவம்மா தான் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டினர். இந்நிலையில் லட்சுமி தேவம்மாவை கொன்றதற்காக அவரது மருமகன் ராமச்சந்திரா, இவருடைய நண்பர்கள் சதீஷ், கிரண் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது லக்ஷ்மி தேவம்மா மக்களை ராமச்சந்திரா இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். ஆனால் ராமச்சந்திரா பற்றி மகளிடம் பொய்யான தகவலை சொல்லி குடும்பத்தில் பிரச்சினையை அவர் உண்டாக்கியுள்ளார். இதனால் ராமச்சந்திரா மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாமியார் தான் காரணம் என்பதால் மகள் வீட்டுக்கு வந்திருந்த லட்சுமியை பேருந்து நிலையத்தில் விட்டு வருவதாக அழைத்துச் சென்ற ராமச்சந்திரா கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் கவர்களில் போட்டு 18 இடங்களில் வீசியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
