குஜராத்தில் வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு கடந்து 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த பெண்ணுக்கு 40 வயது ஆகியும் கருவுறுத்தல் பிரச்சினை இருக்கலாம் என்பதற்காக அந்த தம்பதி மருத்துவரையும் அனுப்பியுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவரது கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.

செயற்கையான முறையில் கருத்தரிக்க விருப்பம் இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் குடும்பம் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு அந்த பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அவரது கணவரிடம் கூற, அவரோ எனக்கு குழந்தை வேண்டும் ஆதலால் இதைப் பற்றி நீ வெளியில் சொல்லக்கூடாது. இதனை மீறினால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கணவன் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து மருமகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பிறகும், அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் கணவரின் தங்கையினுடைய கணவர் குழந்தைக்காக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பல மாதங்கள் தொடர்ந்து அவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் விளைவாக இந்த ஆண்டு அப்பெண் கருத்தரித்தார். ஆனால் சில வாரங்களில் அப்பெண்ணின் கரு கலைந்தது. இதனை அடுத்து பெண் போலீஸில் இதுகுறித்து புகார் அளித்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.