புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்து வரும் 7 நாட்களுக்கு தொடர் மழை பெய்யக்கூடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழையும், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அதாவது இன்று (12/08/25) காலை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மறுநாள் ஆகஸ்ட் 13ஆம் தேதி வட தமிழக பகுதிகளிலும், தமிழகத்தில்  புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.