சமூக வலைதளங்களின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு இயற்கையின் அழகை ரசிக்க பயணித்த ஒரு குழு, மலை உச்சிக்கு சென்று அங்கு காணப்படும் காட்சிகளை கண்டு மகிழ விரும்பியது. ஆனால், இன்ஸ்டாகிராமில் பார்க்கப்படும் அழகிய காட்சிகளுக்கு மாறாக, அந்த இடம் அழகு மட்டுமல்லாமல் ஆபத்துகளும் நிறைந்ததாக இருந்தது. குறிப்பாக, அட்டைப்பூச்சிகளின் தாக்குதல் மிக அதிகமாக இருந்ததால், அழகை ரசிக்கச் சென்றவர்கள் அட்டைகளின் கடியால் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த அனுபவத்தை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தனர். அதில், ஒருவரின் தொப்புளில் இருந்து அட்டைப்பூச்சியை உருவி எடுக்கும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இருப்பினும், இந்த ஆபத்துகளை எதிர்கொண்டு, இறுதியாக அவர்கள் இன்ஸ்டாகிராமில் காணப்படும் அழகிய காட்சிகளை நேரில் ரசித்து மகிழ்ந்தனர். ஆனால், இது போன்ற இயற்கை பயணங்களுக்கு முன் நன்கு யோசிக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அட்டைப்பூச்சிகளின் தாக்குதல் தவிர்க்க முடியாதவை என்பதை வலியுறுத்தி, “ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, தயாராக வாருங்கள்” என்று அவர்கள் வீடியோவில் டிஸ்க்ளைமர் வைத்துள்ளனர். இந்த வைரலான வீடியோ, இயற்கையின் அழகை ரசிக்கும் ஆர்வத்துடன், அதனுடன் வரும் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
