கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கல்லூரியில் சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
அடிக்கடி தனிமையில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது காதலனிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். சிறுவனும் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மாணவியை திருமணம் செய்து கொள்வதில் சிறுவனின் வயது தடையாக இருந்தது. இதனால் அவர்களது திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அவருடைய தாய் மற்றும் சித்தி ஆகியோர் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் சிறுவனை கோட்டில் ஆஜர்படுத்தி குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
