கேரள மாநிலம் திருச்சூரில் இன்று நடந்த சாலை விபத்தில், நோயாளி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின்படி, அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் மற்றும் எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த துயரச்சம்பவம் ஏற்பட்டது.

பலத்த  மோதலில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தார். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>