தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழ காலணியில் மாரியப்பனின் மகன் கார்த்தீஸ்வரன்(19) என்பவர் வசித்து வருகிறார். கார் டிரைவர் ஆன இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு ஓடிச் சென்று தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உடனடியாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்தீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.
