நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபுதாஸ்(27) தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பர் ஆன தமிழரசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் அந்த பகுதியில் உடல் முழுக்க காயங்களுடன் இறந்து கிடந்தார். தமிழரசன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தமிழரசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்த கும்பல் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பெண் விவகாரத்தில் பிரபுதாஸ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்படி கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த லிங்குசாமி(22) என்பவரும், அவரது கூட்டாளிகளான மகாராஜன்(23), வினோத்(42), அருண்குமார்(21) ஆகிய 4 பேரும் சேர்ந்து தாஸை கொன்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் நான்கு பேரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று வினோத் மற்றும் அருண்குமாரை கைது செய்தனர். தலைமுறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் இன்று மடக்கி பிடித்தனர். இதற்கிடையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்திருப்பதாக அவர் பிரபுதாஸின் குடும்பத்தினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது பிரபுதாஸ் கொலை செய்யப்பட்டு கிடந்த அதே இடத்தில் அவர் மீது கார் மோத விட்டு கொலை முயற்சி நடந்து. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அது விபத்து அல்ல கொலை முயற்சி என்று பிரபுவின் தரப்பினர் கூறியிருந்த நிலையில் தற்போது அதே இடத்தில் அவருக்கு கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
