உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கிங் ஜார்ஜ் என்ற மிகப் பெரிய அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள லிப்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது லிப்டில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென லிப்ட் பாதியில் நின்றது. இதனால் அவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்கள் உதவிக்காக பொறுப்பாளரை அழைக்க முயன்ற போது அந்த லிப்ட்டில் 10 எண்களுக்கு பதிலாக 9 இலக்கங்கள் மட்டுமே இருப்பதை கண்டறிந்தனர்.
Inside the lift of King Gorge’s Medical University, UP’s biggest government-run university hospital. Stuck people tried calling the 9-digit mobile number of the incharge. pic.twitter.com/IdHs8i9Xlc
— Piyush Rai (@Benarasiyaa) August 7, 2025
இதையடுத்து லிப்டில் இருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவில் 9 இலக்கங்கள் இருக்கும் எண்கள் தெரிகிறது. மேலும் ஒரு கைக்குழந்தை ஏங்கி ஏங்கி அழும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் நெட்டிசன்கள் மருத்துவமனை பாதுகாப்பு மற்றும் அலட்சியம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
