சென்னையில் இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்வடைந்து, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.9,400 என்றும், சவரனுக்கு ரூ.75,200 என்றும் விற்பனை செய்யப்பட்டு வரலாற்றில் காணாத புதிய உச்சத்தைக் தொட்டுள்ளது.
அதே நேரத்தில், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.127 ஆக விற்பனையடைந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் அதிர்வுகள், மத்திய வங்கிகளின் கொள்முதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கை என பல காரணங்களால் தங்க விலை சீரற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நகை வாங்கும் பொதுமக்களும், முதலீட்டாளர்களும் விலை ஏற்றத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
