திருப்பூர் மாவட்டத்தில், ரிதன்யா கொலைக்குப் பிறகு  நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி என்ற 24 வயது இளம்பெண், திருமணமாகி 11 மாதங்களிலேயே வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

திருமணத்தின் போது அவரது பெற்றோர் 120 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு கார் வழங்கியிருந்தபோதிலும், மேலும் ரூ.50 லட்சம் கோரி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாக புகார் உள்ளது. இதனைத் தாங்க முடியாமல் வாழ்க்கையை முடித்த பிரீத்தியின் மரணத்துக்குப் பின்னால் வரும் உண்மை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, பிரீத்தியின் கணவர் உட்பட அவரது குடும்பத்தினரை கைது செய்துள்ளனர்.