சென்னை மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் மணி. தொழிலதிபரான மணி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனது தோழியான தீபிகா என்பவருடன் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இருவரும் ஒன்றாக மது குடித்தனர். மறுநாள் காலை கண்விழித்து பார்த்த மணி தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த இடத்தில் தீபிகாவும் இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தீபிகா தனது காதலர் சதீஷ்குமார் என்பவருடன் இணைந்து நகையை திருடி அதை 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த பணத்தில் சதீஷ்குமாருக்கு தீபிகா ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார்.

மீதமுள்ள பணத்தை பத்திரமாக வைத்துள்ளனர். தீபிகா அளித்த வாக்குமூலத்தில் நான் எனது பெற்றோர்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறேன். 17 வயதிலேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது கணவர் பிரிந்து சென்றார். நான்கு வயதில் எனக்கு ஒரு மகன் உள்ளார். எனக்கு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதுதான் ஆசை. எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் எனது ஆசையை பூர்த்தி செய்வார்கள்.

தொழிலதிபரை ஹோட்டலில் தான் முதலில் பார்த்தேன். இருவரும் அறை  எடுத்து தங்கி மது குடித்தோம். இருவரும் உல்லாசமாக இருந்தோம். அந்த சமயத்தை பயன்படுத்தி தங்க சங்கிலியை திருடினேன். என்னுடைய ஆண் நண்பர்களை மயக்கி பணம் பறித்துள்ளேன். யாரும் இதுவரை புகார் அளித்ததில்லை. இப்போதுதான் முதல் முறை மாட்டிக் கொண்டேன் என தீபிகா கூறியுள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.