கோவை அவிநாசி சாலையில் ரெசிடென்சி ஹோட்டலுக்கு எதிர்ப்புறமாக உள்ள தூண்கள் ஹோட்டலுக்கு ஆதரவாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரெசிடென்சி ஹோட்டலுக்கு சாதகமாக இரண்டு தூண்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக இரண்டு தூண்கள் இடமாற்றப்பட்ட விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
மேலும் 2 தூண்களையும் தரமட்டமாக இடித்து விட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி மீண்டும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு தேவைப்படும் கூடுதல் செலவுகளை பொறியாளர் இடம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தூண்களை “உண்மையின் தூண்கள்” என்று அழைக்க வேண்டும் வாய்மையே வெல்லும் என்ற வசனத்தை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
