உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, மது போதையில் இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் ஹிருதய் லால் என்ற நபர் தாக்கப்பட்டு, காயம் அடைந்த நிலையில் லக்னோவுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். ஆனால், அதிகாலை 4.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சில் கொண்டு வந்தபோது, கோண்டா – லக்னோ நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு, அந்த உடலை நேராக சாலையில் இழுத்து வீசும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகின்றன.

“>

 

இந்த வீடியோவில், ஆம்புலன்சின் பின்புற கதவிலிருந்து ஒருவர், சடலத்தை சாலையின் நடுவில் இழுத்துச் செல்வது தெளிவாக தெரிகிறது. அருகிலிருந்த போலீசார் அதை தடுக்க முயற்சித்தும், அவரது நடவடிக்கையை நிறுத்த முடியவில்லை.

இந்தக் காட்சிகள் அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. இறந்தவரின் குடும்பத்தினர் சில முக்கிய நபர்களின் செல்வாக்கின் கீழ், நியாயம் கேட்டு போராட்டத்தின் ஒரு வடிவமாக சாலை மறியல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“>

குறித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் “குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது” எனவும், உடல் மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர்.

 

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பிஉள்ளது . சாலையில் சடலம் வீசப்பட்ட இந்த வீடியோ தற்போது பலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.