இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், சாலையோரத்தில் ஒரு இளைஞர் தனது பைக்குடன் நின்றுக் கொண்டிருக்கிறார். அப்போது இரண்டு நபர்கள் அருகில் வந்து, அவரது பைக்கை திருட முயற்சிக்கிறார்கள்.

அந்த நேரத்தில், அந்த இளைஞர் தனது பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி போல ஒரு பொருளை எடுக்கிறார். இதைப் பார்த்த திருடர்கள் அதிர்ச்சி அடைந்து பயந்துவிட்டு, அந்த இடத்திலிருந்து விரைந்து ஓடிச் செல்கிறார்கள்.

இந்த காணொளியின் உண்மையான திருப்பம் என்னவென்றால், அந்த துப்பாக்கி போலியானது என்பதே! அது உண்மையான ஆயுதம் அல்ல. ஆனால் அந்த இளைஞரின் திடீர் செயல்பாடு திருடர்களை பயமுறுத்தியது. இது போன்ற செயல்கள், சில சமயங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் உயிரை காக்கும் முக்கியமான தீர்வாக மாறும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இது.

இந்த வீடியோ YouTube-இல் “பேங் தம்புவே” என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த பலர் அந்த இளைஞரின் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர் “அவர் உண்மையாகவே தைரியசாலி. நேரத்தை சரியாக பயன்படுத்தினார்” என கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் “இந்த திருடர்கள் இப்படி ஓடினது எப்போதும் நினைவில் இருக்கும்” எனவும் கூறியிருக்கிறார். பொதுமக்கள் மத்தியில் இது ஒரு விழிப்புணர்வு வீடியோவாக பரவி வருகிறது.