கேரளா மாநிலத்தின் கண்ணூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஏ.கே ரைரு கோபால். இவரது மனைவி சகுந்தலா. இவர் பொதுமக்களுக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தார். ஒரு நாளைக்கு 300 பேருக்கு சிகிச்சை அளிப்பாராம். கடத்தல் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது ஏழ்மை நிலையை கண்டு வேதனை அடைந்தார்.
இதனால் மக்களுக்கு குறைந்த செலவில் சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதற்காக 2 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்தார். இவருக்கு 81 வயது ஆகிறது. வயது முதிர்வு ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை மக்கள் மருத்துவர் என போற்றி வந்தனர்.
தனது மருத்துவ சேவைகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஏ.கே ரைரு கோபால் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.கே ரைரு கோபால் இறப்பு மருத்துவத்துறையின் பேரிழப்பு என கூறியுள்ளனர்.
