சமூக ஊடகங்கள் பரவலாக வளர்ந்து வரும் காலத்தில், பலரும் புகழ்பெற பொதுவிடங்களில் வீடியோக்கள் எடுத்து பதிவிடுகிறார்கள். இதுபோலவே, ஒருபக்கம் வீடியோ எடுக்கும் இளைஞர், மறுபக்கம் அந்தச் செயலை எதிர்த்து பெண்கள் — இந்த முரண்பாட்டை ஆவணப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், சாலையோரம் வாகனங்களை வீடியோ எடுத்து கொண்டிருந்த இளைஞரிடம், சில பெண்கள் வந்து “எங்கள வீடியோ எடுக்கிறீர்களா?” என்று கேட்டுத் திட்டிக்கொண்டு, அவனை போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டுகின்றனர். இளைஞர், “நீங்கள் பொய் குற்றம் சுமத்தி மிரட்டுவது சரியா?” என கேட்கிறார். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா, அல்லது யாரது தவறு என்பதைத் தெளிவுபடுத்தும் உண்மை தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த வீடியோ “Ghar Ke Kalesh” என்ற X (முன்பு Twitter) கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 5.5 லட்சம் லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துகளை பெற்றுள்ளது. இதனைக் கண்ட சில நெட்டிசன்கள், “இந்தியாவில் பாலின சீரமைப்பு சட்டம் அவசியமாகிறது” என கருத்து தெரிவித்துள்ளார். ஒருவர் “அவங்க சொல்றது சரிதான்”, இன்னொருவர் “இப்போ பெண்களுக்கு அதிகபட்ச அதிகாரம் வந்துவிட்டது போல” என்கிறார். மற்றொரு பயனர், “யாரையும் கேட்காம வீடியோ எடுக்கக்கூடாது… அனுமதி வாங்கணும்” என உறுதியாக கூறுகிறார்.

“>

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பொது மக்களிடையே உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தின் உண்மை நிலை வெளியாகும் வரை, இது பாலின சமத்துவ சட்டத்தின் தேவை பற்றிய விவாதத்துக்கு ஒரு முன்னோட்டமாக மாறி வருகிறது.