தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தனது நடிப்பின் திறமையால் பல்லாயிரம் கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். இவர் நடிப்பு மட்டும் நன்றி கார் ரேசிலும் தற்போதைய ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதாவது சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி நடிகர் அஜித்குமார் உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளார். அதில் சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 ஆண்டுகளை நிறைவு செய்ததாக குறிப்பிட்டார் எந்த சிபாரிசும் இல்லாமல் இந்த துறையில் நுழைந்ததாக தெரிவித்துள்ளார். ரசிகர்களை தனது சுயநலத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.