தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா, அரசியல் களத்திலிருந்து சினிமா உலகில் கால் பதித்து, ‘கந்தன் மலை’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார். இன்று வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முன்னாள் எம்எல்ஏவாகவும், தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் எச். ராஜா, சமீபகாலமாக சில தகவல்களில் சினிமாவில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. அந்த தகவல் உண்மை என உறுதிப்படுத்தும் வகையில் இன்று ‘கந்தன் மலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச். ராஜா முறுக்கு மீசையுடன், கழுத்திலும் கையிலும் ருத்ராட்ச மாலை அணிந்து, கோவிலின் நுழைவுவாசல் வழியாக பேரதிர்த்தியாக செல்வது போன்ற அமைப்பில் காட்சியளிக்கிறார்.

‘கந்தன் மலை’ என்ற பெயர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தைக் குறிக்கலாம் என செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில், இந்த திரைப்படம் அந்த பிழையையும் எதிரொலிக்கும் வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குவது வீர முருகன் என்பவராகும். தயாரிப்பாளர்களாக சிவ பிரபாகரன் மற்றும் சந்திரசேகர் செயல்படுகிறார்கள்.

சமீபத்தில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த எச். ராஜா, “சினிமாவிலும் நீங்கள் வரப்போகிறீர்களா?” என்ற கேள்விக்கு “I Don’t Know… அது வெளியில் வரட்டும்!” என சிரித்தபடி பதிலளித்திருந்தார்.

தற்போது அவரது பதில் வன்மையாக உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அரசியல்வாதியாக இருந்து நடிகரானவர்களின் பட்டியலில் எச். ராஜாவும் இணைந்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இப்படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் உள்ளிட்ட மேலும் பல அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.