பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக் கான் தனது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் உருவான “ஜவான்” திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்திருந்த ஷாருக் கான், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் இந்த படம் ₹1,148 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, பிளாக்பஸ்டர் ஹிட் என்ற பெயரைப் பெற்றது.
இந்த வெற்றியின் பின்னணியில், தற்போது 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக் கானுக்கு “ஜவான்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் கிடைக்கும் முதல் தேசிய விருது என்பதுடன், அவரது ரசிகர்களிடையே பெரும் பரிசாகவும் பார்க்கப்படுகிறது.
1992-ம் ஆண்டு “தீவானா” திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ஷாருக்கான், இன்றுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இத்தனை காலத்திற்குப் பிறகு “ஜவான்” திரைப்படமே அவருக்கு தேசிய கண்ணியத்தை பெற்றுத்தந்துள்ளது.
Thank you for honouring me with the National Award. Thanks to the jury, the I&B ministry… Iss samman ke liye Bharat Sarkar ka dhanyawaad. Overwhelmed with the love showered upon me. Half a hug to everyone today…. pic.twitter.com/PDiAG9uuzo
— Shah Rukh Khan (@iamsrk) August 1, 2025
“>
இந்த விருதை பெற்றதற்குப் பிறகு ஷாருக் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நன்றி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்த வெற்றி என் ரசிகர்களின் அன்பிற்கும், படத்தில் உழைத்த முழு குழுவினருக்கும் உரியது. என் திரைப்பயணத்தில் இது மறக்க முடியாத தருணம்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த விருதுக்கு இந்திய திரையுலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
