தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

“>

 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மோனிகா பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  ட்ரெய்லர் வெளியீட்டு   விழா ஆகஸ்ட் இரண்டாம் தேதி நாளை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.