இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விதிகள் அமலாவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி என்பதால் 6 புதிய விதிகள் நாடு முழுவதும் அமலாக இருக்கிறது. அதன்படி சிலிண்டர் விலை, யுபிஐ விதிகள், வங்கி சேவைகள், கிரெடிட் கார்டு மற்றும் வீட்டு செலவுகள் வரை நம்முடைய அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் அமலாகிறது.

சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் இன்று 1-ம் தேதி என்பதால் சிலிண்டர் விலை உயரலாம் அல்லது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுபிஐ விதிகள்: (ஜி பே, போன் பே மற்றும் பேடிஎம்)

அதாவது யுபிஐ விதிகளில் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே வங்கி கணக்கு சரி செய்ய முடியும். இதேபோன்று வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ கணக்குகளின் மூலம் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸ் செக் செய்ய முடியும். அதன் பிறகு ஆட்டோ டெபிட் முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு இதற்கு கால நிர்ணயமும் நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு பரிவர்த்தனை தோல்வியடையும்போது இனி அந்த நிலையை 90 வினாடிகளுக்கு இடைவெளியில் 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். மேலும் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளில் உச்சவரம்பு ஒரு லட்சம் முதல் மருத்துவமனை போன்றவைகளுக்கு 5 லட்சம் வரை உச்சவரம்பு உயர இருக்கிறது.

கிரெடிட் கார்டு விதிகள்:

சில குறிப்பிட்ட வங்கிகள் கிரெடிட் கார்ட் விதிகளில் மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி (SBI) கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்டுகளின் மதிப்பு மற்றும் மதிப்புகளை மாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள் தொடர்பான வங்கிகளின் அறிவுரைகளை கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்கி விடுமுறைகள்: 

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு நிறைய நாட்கள் விடுமுறை வரும் என்று கூறப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதனை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே வங்கிப் பணிகளை திட்டமிட்டு முடித்துக் கொள்வது சிறந்தது.

விமான எரிபொருள் விலை:

ஒவ்வொரு மாதமும் விமான எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். மேலும் அந்த வகையில் இந்த மாதமும் விமான எரிபொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டால் அது விமான டிக்கெட்டுகளின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இது போன்ற நிதி மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.