சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர், ஆபத்தான நாகப்பாம்பின் அருகே மிக எளிதாக நடனம் ஆடத் தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து அவர் அந்த பாம்பை கையில் எடுத்துக் கழுத்தில் சுருட்ட முயன்ற போது, நாகப்பாம்பு திடீரென திரும்பி அவரை கடிக்கிறது. ஆனால், அதற்குப் பிறகும் அந்த இளைஞர் தனது நடனத்தை தொடர்கிறார் என்பதும் வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

இந்த வீடியோவை @gharkekalesh என்ற ட்விட்டர் (X) பயனர் “பாம்புடன் விளையாடாதே” என்ற எச்சரிக்கையுடன் பகிர்ந்துள்ளார். வீடியோ சில மணி நேரங்களிலேயே 38 ஆயிரம் பார்வைகளைத் தாண்டியிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரின் கையில் ஏற்பட்ட காயங்களும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நெட்டிசன்கள் அந்த இளைஞரின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பலரும் இது ஒரு பெரிய அறிவுறுத்தலாகும் எனக் கூறி வருகின்றனர். ஒருவர், “பாம்புகள் யாருக்கும் நண்பன் இல்லை சகோதரரே… வாழ்க்கையைச் சோதிக்காதீர்கள்” என கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம், ஆபத்தான விலங்குகளுடன் வணிக நோக்கில் அல்லது வேடிக்கைக்காக செயல்படுவது எவ்வளவு அபாயகரம் என்பதை நினைவூட்டுகிறது.