ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் உழுது கொண்டு இருந்தார். அப்போது அவர் வயலில் ஏதோ ஒரு பொருள் மின்னுவதை கண்டார். பின்பு அதை கையில் எடுத்து பார்த்த அவருக்கு அது வைரம் என தெரிய வந்தது. எனவே அந்தப் பெண் விவசாயி அதனை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். அதற்குள் இவர் கண்டெடுத்த வைரம் பற்றி சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

எனவே இதுகுறித்து அறிந்த அப்பகுதி வியாபாரிகள் மற்றும் ரத்தின கற்கள் ஆர்வலர்கள் அந்த வைரத்தை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு விவசாயி வீட்டிற்கு படையெடுத்தனர். இந்த நிலையில் அந்த பெண் விவசாயியின் குடும்பத்தினர் வைரத்திற்கு ரூ 18 லட்சம் விலை  நிர்ணித்தனர்.

ஆனால் அதிக விலைக்கு வாங்க விருப்பமில்லாத வைர வியாபாரிகள் ஒரு குழு அமைத்து இந்த வைரத்திற்கு  ரூபாய் 8 லட்சம் வழங்குவதாக கூறினர். அதற்கு விவசாயியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வைரம் குறித்து அறிந்த ஒரு புதிய வியாபாரி வைரத்திற்கு ரூபாய் 13.5 லட்சம் தருவதாக கூறினார்.

எனவே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வைரத்தை அந்த வியாபாரிக்கே  விற்றனர். இந்த ஒரு வைர கல்லின் மூலன் அந்த பெண்ணின் மொத்த கஷ்டமும் தீர்ந்தது எனவும், ஒரே நாளில் அவர் லட்சாதிபதி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் அந்த வைரம் 13.5 லட்சத்திற்கு தான் விற்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்துவதற்காக சென்றுள்ளதாகவும், அதற்கு அந்த குடும்பத்தினர் வைரத்தை விற்ற மதிப்பை கூறவில்லை எனவும் உள்ளூர் பத்திரிக்கை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து இது போன்ற வைரங்கள் சமீபகாலமாகவே விவசாய நிலங்களில் கண்டெடுக்கப்படுகிறது. அவற்றின் மதிப்பு விலை உயர்ந்த வைரங்களில் ஒன்றாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.