குஜராத் மாநிலம் கச்ச் மாவட்டத்தில் உள்ள ரோகடியா ஹனுமான் ஜீ கோயிலில் நேற்று மாலை பயங்கர விபத்து ஒன்று நடைபெற்றது. தரிசனம் செய்துவிட்டு கோயில் வெளியே நின்று கொண்டிருந்த 55 வயதான உமேத்பாய் ஜாலேந்திர்பாய் ஜாலா என்பவர் மீது, வேகமாக வந்த கிரேன் ஒன்று மோதி சென்றது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துச் சம்பவம் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
गुजरात के कच्छ ज़िले के मुंद्रा क्षेत्र में बुधवार शाम रोकड़िया हनुमानजी मंदिर के बाहर दर्शन कर रहे 55 वर्षीय उम्मेदभाई जालेंद्रभाई झाला को एक तेज रफ्तार क्रेन ने टक्कर मार दी, जिससे उनकी मौके पर ही मृत्यु हो गई। यह हादसा शाम करीब 5 से 5:30 बजे के बीच हुआ और पूरी घटना मंदिर परिसर… pic.twitter.com/0jc0GRYIzm
— AajTak (@aajtak) July 31, 2025
இந்நிகழ்வுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பெரும் வாகனங்களின் கட்டுப்பாடற்ற இயக்கத்தை எதிர்த்து சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறுகிய நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய கிரேன் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
