சென்னை ஆவடியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சம்பவ நாளில் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சேர்ந்து மது குடித்தார்.
பின்னர் அதே ஹோட்டலில் ஒரு அறை எடுத்து இருவரும் இரவு முழுவதும் விடிய விடிய உல்லாசமாக இருந்த நிலையில் மறுநாள் காலை தொழிலதிபர் கண்விழித்து பார்த்தபோது தன்னுடைய காதலை ஆன இளம் பெண்ணை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளும் மாயமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
அந்தப் பெண் தீபிகா (28) என தொழிலதிபர் போலீசாரிடம் கூறிய நிலையில் அவர் சொன்ன அடையாளத்தின் அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
