உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் அடிப்படையிலான அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறார்.

தற்போது இந்த ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில், இது இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது போட்டியை உருவாக்கும் என கருத்துகள் வெளியாகின.

இந்நிலையில், ஸ்டார்லிங்க் நுழைவது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு பெரிதாக அச்சுறுத்தலாக இருக்காது என அதிகாரிகள் விளக்கியுள்ளனர். பி.எஸ்.என்.எல்., கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் தரைவழி நெட்வொர்க் மூலமாக குறைந்த விலையில் சேவையை வழங்கி வருகிறது.

ஸ்டார்லிங்க் உயர் செலவில் செயற்கைக்கோள் சேவையை வழங்குவதாகும். எனவே இரண்டும் வெவ்வேறு வகை வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், இரண்டு நிறுவனங்களும் ஒரே இடத்தில் நேரடி போட்டியில் ஈடுபடவில்லை என்றும் அரசு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.