கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரி அருகே பெரிங்கத்தூர் பகுதியில் நடந்த பேருந்து பயணத்தின்போது நடந்த பரபரப்பான சம்பவம்  பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் கோழிகோடு மாவட்டத்தை  சேர்ந்த விஷ்ணுஜித் (வயது 27), தலசேரி–தொட்டில்பாளம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது பயணம் செய்த  நால்வர் இவரை திடீரென தாக்கினர்.

தாக்கிய நபர்கள் ஒரு மாணவிக்கு கட்டணத் தள்ளுபடி (கன்சஷன்) மறுக்கப்பட்டதாக கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் முகம், மூக்கு மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். மாணவர் சலுகைக்காக செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாததால் தள்ளுபடி வழங்க இயலாது என கூறியதற்கே இந்த தாக்குதல் நடந்ததாக விஷ்ணுஜித் கூறியுள்ளார்.

“>

 

இந்த சம்பவத்தில் காயமடைந்த விஷ்ணுஜித் தற்போது தலசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சோக்கிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.