தமிழ்நாட்டுக்கு, சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு, ஆகஸ்ட் 1ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய ₹2,151.59 கோடி நிதியையும், அதற்கான 6% வட்டியுடன் ₹139.70 கோடி வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய திட்டமான சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக இது முதல் முறையாக உயர்நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்படும் முக்கிய வழக்காக இருக்கிறது.